போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தில், தம்முடன் அதிகளவிலானோர் கைகோர்த்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share Button

போதைப்பொருள் எதிர்ப்புப் போராட்டத்தில் தாம் தனிமைப்படுத்தவில்லை என்று 90 சதவீதமான மக்கள் தன்னோடு கைகோர்த்திருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு, மரணதண்டனையை வழங்கும் தனது தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் கருத்து வெளியிட்டபோது, அதனை ஆதரித்து, சில போதைப் பொருள் வர்த்தகர்களும், மோசடிகாரர்களும் மகிழ்ச்சி வெளியிட்டார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார். இரத்தினபுரி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றினார். சப்ரகமுவ அழகானது என்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்து கொண்டார். நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே தான் சகல தீர்மானங்களையும் எடுத்ததாக ஜனாதிபதி கூறினார். அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும், புத்திஜீவிகளும் தமது பொறுப்பாக நிறைவேற்ற முன்வருவது அவசியமாகும். சப்ரகமுவ மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஆளுனர் தம்ம திசாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு அமைய நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 100 குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான அனுசரணை வழங்கப்பட இருக்கின்றது. எஹலியகொட வைத்தியசாலையின் ஐந்து மாடிக் கட்டடத்தொகுதியை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-07 | 11:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 180
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 136
புதிய நோயாளிகள் - 2
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 257
நோயிலிருந்து தேறியோர் - 38
இறப்புக்கள் - 6