எஸல பெரஹர உற்சவ காலத்தில் கண்டி நகரை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு ஏற்பாடு

Share Button

இம்முறை வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி எஸல பெரஹர உற்சவம் நாற்பெரும் தேவாலயங்களில் சுபவேளையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும். அந்த ஆலயங்களில் உள் வீதியுலா இடம்பெற்றதன் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை முதலாவது கும்பல் பெரஹர வீதிவலம் வரும். ஐந்து நாட்கள் கும்பல் பெரஹர இடம்பெறும். அடுத்த மாதம் பத்தாம் திகதி ரந்தோலி பெரஹர ஆரம்பமாகும். அடுத்த மாதம் 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் நிக்கினி நோன்மதி தினத்தன்று இறுதி ரந்தோலி பெரஹர இடம்பெறும். அதற்கு மறுநாள் அதிகாலை ஹெட்டம்பே நீர்நிலையில் தீர்த்தோற்சவம் இடம்பெறும். மறுநாள் பகல் பெரஹர வீதிவலம் வரும் அதேவேளை, பெரஹர வெற்றிகரமாக நிறைவு பெற்றதென அறிவிக்கும் குறிப்பேட்டை தியவடனநிலமே அன்றைய தினம் மாலை ஜனாதிபதியிடம் கையளிப்பார். அதனுடன் கண்டி எஸல பெரஹர உற்சவம் நிறைவுபெறும். இந்தப் பெரஹராவை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்;.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *