மேலும் 16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

Share Button

16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி இன்று கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பட்டதாரிகளுக்கும் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் ஏனைய 22 மாவட்டங்களில் இருந்து தலா 40 பேருமாக 880 உள்வாரியான பட்டதாரிகளும் 880 வெளிவாரிப் பட்டதாரிகளும் நியமனம் பெறவுள்ளனர். நண்பகல் 12.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நியமனம் வழங்கப்படும்.
தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நியமனம் வழங்குமாறு பிரதமர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களின் செயலாளர்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளையோர் அலுவல்கள் அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த அமைச்சு பதவியை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *