டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் நாளை தொடக்கம் ஆரம்பமாகிறது

Share Button

நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோய் தொற்று அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக டெங்கு நோய் தடுப்புப் பிரிவும், ஜனாதிபதியின் செயலணியும் இணைந்து நாளை தொடக்கம் அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை விசேட டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்த்pட்டங்கள் பலவற்றை முன்னெடுக்கவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் 40 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

இந்த வேலைத்திட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, பொலிஸ், கள உத்தியோகத்தர்கள், தொண்டு நிறுவனங்களும் பங்குகொள்கின்றன.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் சகல பரீட்சை மத்திய நிலையங்கள், பரீட்சை இணைப்பு நிலையங்களை உள்ளடக்கும் வகையில், எதிர்வரும் 2ஆம் திகதி தொடக்கம் 4ஆம் திகதி வரையில் விசேட டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

காலை 6 மணி தொடக்கம் முற்பகல் 11 மணிவரையிலும், மாலை 3 மணி தொடக்கம் 7 மணிவரையும் டெங்கு நுளம்புகள் மிகவும் வினைத்திறனுடன் செயல்படுகின்றன. பகல் வேiளைகளில் நுளம்பு கடியிலிருந்து பாதுகாப்பை பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *