சஹரானுடன் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Share Button

தடை செய்யப்பட்ட தேசிய தொஹீத் ஜமாத் அடிப்படைவாத முஸ்லிம் அமைப்பின் தலைவரான சஹரான் ஹஸீமுடன், நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்தரங்குகளில் பங்குகொண்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமது வீட்டில் தங்கியிருந்த போது, நேற்றிரவு 10.30 அளவில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அவரை கைது செய்துள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், அவர் குருநாகல் மாவட்டத்தின் கட்டுபொத்த என்ற இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மொஹமட் அப்துல் காதர் ஹஸீம் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் சஹரானின் மனையின் மூத்த சகோதரராவார்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11