நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்காக புதிய பொருளாதாரக் கொள்கையொன்று அமுல்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் 16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். நிகழ்வு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது.
மூவாயிரத்து 880 பட்டதாரிகள் இன்று முதற்கட்டமாக நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டார்கள். ஏனைய பட்டதாரிகளுக்கு மாவட்ட செயலகங்களின் ஊடாக நியமனக் கடிதங்கள் வழங்கப்படவிருக்கின்றன என்று பிரதமர் கூறினார்.