இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று.

Share Button

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் – இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது. பகலிரவுப் போட்டியாக இடமபெறும் இந்தப் போட்டி பிற்பகல் 2.30ற்கு ஆரம்பமாகிறது. இன்றைய போhட்டியில் இலங்கை அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

செஹான் ஜயசூரிய, வனிந்து ஹசரங்க மற்றும் தசுன் ஷானக ஆகியோர் அணியில் பெரும்பாலானும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3ற்கு பூச்சியம் என்ற கணக்கில் இந்தத் தொடரை கைப்பற்றுவது தமது எதிர்பார்ப்பாகும் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இதனைத் தெரிவித்தார்.

இந்தப் போட்டிக்கு நுவன் குலசேகர என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த தினம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அவரைக் கௌரவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்ற ஒரேயொரு பந்து வீச்சாளர் நுவன் குலசேகர என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *