உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுத்திருக்க முடியும் என ஜனாதிபதி தெரிவிப்பு.

Share Button

அதிகாரிகள் தமது பொறுப்பினை உரிய வகையில் நிறைவேற்றியிருந்தால் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுத்திருக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் போது அவர்கள் தமது பொறுப்பினை உரிய வகையில் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் தான் அறிந்திருந்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று இடம்பெற்ற ‘சமாதானம், ஒற்றுமை மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாட்டில்’ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, அரச வங்கிகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமெயொழிய ஒருபோதும் தனியார் மயப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தனது அரசியல் கொள்கை என அவர் குறிப்பிட்டார். இலங்கை வங்கியின் 80ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிடடார்.

நிறுவன ரீதியில் இடம்பெற்ற மோசடி, முறையற்ற முகாமைத்துவம், தொழிற்சங்க நடவடிக்கை ஆகியவற்றினால் ஏற்பட்ட நிலவரம் இரகசியம் அல்ல எனவும் அவர் கூறினார்.

2015ஆம் ஆண்டு தொள்ளாயிரம் பில்லியன் ரூபாவாக இருந்த இலங்கை வங்கியின் நிதி நிலமை தற்போது ஆயிரத்து 500 பில்லியன் ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கடன் பெறுவதற்கு முடியாதிருந்த நாடு தற்போது முன்நோக்கிச் சென்றுள்ளது. கடன் செலுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *