ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அங்கு அவசர நிலைமை பிரகடனம்

Share Button
ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத் தீயினால் 6.7 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளன.
ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்திலுள்ள கிராஸ்னோயார்க் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டுத் தீ பரவ ஆரம்பித்தது. பாதுகாப்பு தரப்பினர் காட்டுத் தீயை கட்டுப்படுத்த பலத்த பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர். தீ அணைக்கம் பணியில் இருபது விமானங்கள் அமர்த்தப்பட்டுள்ளன. எனினும் தீ தற்பொது தீவிரமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அப்பிராந்தியத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த பிரதேசத்தை அண்டி வாழும் மககள் அவதானத்துடன் இருக்குமாறு ரஷ்யாவின் அனர்த்த நிவாரண சேவைகள் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *