உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் கைதாகிய 20 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்.

Share Button

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற  தாக்குதலின் பின்னரான விசாரணைகளின்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 சந்தேக நபர்கள் கல்கிஸ்சை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள்.

அவசரகால சட்டத்தின் கீழ் இவர்களிடம் விசாரணைகளையும், வாக்குமூலங்களையும் பெற்றுக் கொண்டதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவித்திருக்கிறார்கள். விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *