பிலிப்பைன்ஸில், படகு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு

Share Button

பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற மூன்று படகு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸின் மத்திய பிராந்திய கைமாரஸ் நீரிணையில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளே விபத்துக்குள்ளாகியுள்ளன. கடல் சீற்றத்தால் ஏற்பட்ட கடும் காற்றில் சிக்கிய படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த அனர்த்தங்களில் சிக்கிய 63 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்; தெரிவித்துள்ளன. கைமாரஸ் கடல் எல்லiயில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதனால் எவரும் கடலக்குச் செல்ல வேண்டாம் என பிலிப்பைன்ஸ் நாட்டின் வானிலை நிலையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், படகுகளில் பயணித்தவர்களே விபத்தில் சிக்கியதாக அந்நாடடின் அனர்த்த முகாமைத்தவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *