கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

Share Button

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது.

பரீட்சைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் 3இலட்சத்து 37 ஆயிரத்து 704பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 315 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்திட்யசகருமான றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *