மதுவரித் திணைக்களம் இந்த வருடம் 13 கோடி ரூபாவை வருமானமாக எதிர்பார்க்கிறது

Share Button

மதுவரித் திணைக்களத்தினால் கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் 24 ஆயிரத்து 150 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்டவிரோத மதுபான உற்பத்திகளை ஒழிக்கும் நோக்கில் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோத மதுபான உற்பத்தி, உற்பத்தி செய்யப்பட்ட மதுபானங்களை தம்வசம் வைத்திருத்தல், மதுபான தயாரிப்புக்கான உற்பத்திப் பொருட்களை தம்வசம் வைத்திருத்தல், சட்டவிரோத மதுபானங்களைவிற்பனை உள்ளிட்ட குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுவரித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச்.ஜி.சுமணசிங்க இதனைத் தெரிவித்தார். கடந்த வருடத்தில் 49 ஆயிரத்து 312 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்;பட்டதாகவும், இதன் மூலம் 25 கோடி ரூபா அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் குறி;பிட்டார். இந்த வருடம் மதுவரித் திணைக்களம் 13 கோடி ரூபாவை வருமானமாக எதிர்பார்த்துள்ளது. ஜூலை மாதம் அளவில் சுமார் ஏழு கோடி ரூபா வருமானமாக கிடைக்கப் பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *