கண்டி எசல பெரஹராவின் முதலாவது கும்பெல் பெரஹராவின் வீதி உலா இன்று இரவு இடம்பெறவுள்ளது

Share Button

கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி எசல பெரஹராவின் முதலாவது கும்பெல் பெரஹராவின் வீதி உலா இன்று இரவு இடம்பெறவுள்ளது. ஐந்து நாட்களுக்கு கும்பெல் பெரஹராவுடன் வீதி உலா இடம்பெறும். ரந்தோலி பெரஹராவின் வீதி உலா எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும். இம்மாதம் 14ம் திகதி இடம்பெறும் நோன்மதி தினத்தன்று இறுதி ரந்தோலி பெரஹராவின் வீதி உலா இடம்பெறும். மறுதினம் காலை கெட்டம்பேவில் தீர்த்தோற்சவ நிகழ்வு இடம்பெறும். அன்றைய தினம் பிற்பகல் பெரஹராவின் வீதி உலாவுடன் பெரஹரா வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குறிப்பிடும் பத்திரம் தியவடன நிலமேயினால் அன்றைய தினம் மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து இம்முறை கண்டி எசல பெரஹரா நிகழ்வுகள் நிறைவு பெறும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *