இராஜாங்க அமைச்சர்கள் இருவரும், ஆளுநர்கள் மூவரும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்

Share Button

இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேர்; இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அனோமா கமகேயும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக லக்கீ ஜயவர்தனவும் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளன.

இதேவேளை மத்திய, ஊவா, தென் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். அதன்படி மத்திய மாகாண ஆளுநராக . ரஜித கீர்த்தி தென்னகோனும், ஊவா மாகாண ஆளுநராக மைத்ரி குணரத்னவும்,தென் மாகாண ஆளுநராக ஹேமால் குணசேகரவும் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *