தனிப்பட்ட உறுப்பினரின் யோசனையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்கும் யோசனை சட்டவிரோதமானது என அறிவிப்பு

Share Button

கம்பஹா மாவட்டத்தில் மிகவும் பெறுமதியான வானந்தரமாக கருதப்படும் முத்துராஜவல வானந்திரத்தின் அழிவுக்கு அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கும் பொறுப்பிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டினதும் மக்களதும் எதிர்காலத்திற்காக பாரிய இந்த சுற்றாடல் அழிவை தடுப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். திவுலபிட்டிய பொதுமக்கள் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

மரண தண்டனை ஒழிப்பதற்காக தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் யோசனையாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சட்ட ரீதியானது அல்ல என்று சட்ட மா அதிபர் தனக்கு அறிவித்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.

கம்பஹா மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் கடந்த 29ம் திகதி முதல் ஆறு நாட்களாக நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மூன்று இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நன்மை அடைந்தனர். இதன்கீழ் நான்காயிரத்திற்கும் அதிகமான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு இதற்கென 123 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. கம்பஹா மாவட்ட மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *