ஜனநாயக தேசிய முன்னணி இம்மாத இறுதிக்குள் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Share Button

இந்த மாத இறுதிக்கு முன்னர் ஜனநாயக தேசிய முன்னணி உருவாக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்த தேசிய முன்னணியை உருவாக்குவது தொடர்பான் கலந்துரையாடலின் போதே பிரதமர் தெரிவித்துள்ளார். புதிய முன்னணியை பதிவு செய்வதற்கு சற்று தாமதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய முன்னணி உருவாக்கப்படும்போது சகல கட்சிகளினதும் தனித்துவம் மற்றும் சுயாதீன தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் நோக்கமாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வலுவான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலம் நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வது இலக்காகும் என்றும் பிரதமர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *