நேற்று வெள்ளவத்தையில் இடம்பெற்ற மோதலுடன் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் கைது

Share Button

வெள்ளவத்தை மயுர பிளேஸ் பகுதியில் இரு குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலுடன் சம்பந்தப்பட்ட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் 9 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளடங்குகின்றார். மோதலைத் தடுப்பதற்கு பொலிசார் கண்ணீர் புகையைப் பிரயோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வெள்ளவத்தைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஆதரவும் இதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்தார்.

மீரிகம, பள்லேவல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்தை அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டை அடுத்து, பல்லேவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றுமொரு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11