இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கு 605 வீர, வீராங்கனைகள்

Share Button

நேபாளத்தின் காத்மன்டு நகரில் இடம்பெறும் இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 605 வீர வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்த விளையாட்டுப் போட்டியை இலக்காகக் கொண்டு 27 அணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகல தெரிவித்துள்ளார். இராணுவம் மற்றும் விளையாட்டு அலுவல்கள் அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இந்த அணிகளுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வீரருக்காகவும் அரசாங்கம் ஒரு லட்சம் ரூபா செலவிடுவதாக அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 200ற்கும் அதிகமான பதக்கங்களை வெல்வது இலங்கையின் எதிர்பார்ப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11