வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தினதும், மன்னார் மடு தேவாலய வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்.

Share Button
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. இன்று காலை பத்து மணிக்கு இடம்பெறும் கொடியேற்றத்தைத் தொடர்ந்து திருவிழா தொடர்ந்து 25 தினங்களுக்கு இடம்பெறும். எதிர்வரும்; 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் 30ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும். நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று யாழ்ப்பாணம் – வேல்மடம் முருகன் கோவிலில் நேற்றுக் காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து கொடிச்சீலை பருத்தித்துறை வீதியூடாக நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குறித்த கொடிச்சீலை சுபநேரத்தில், நல்லூர்க் கோவிலின் பிரதமக் குருக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
===
மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் என மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்த அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகும் திருவிழா எதிர்வரும் 15ம் திகதி ஆயர்களின் கூட்டுத்திருப்பலியுடன் நிறைவடையும். திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் நலன்கருதி தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார். மடுத்திருத்தலத்திற்கு வரும் அடியார்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழக்குமாறும் அருட்தந்தை கேட்டுள்ளார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *