பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கிறார்.

Share Button
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகக் கண்டறியும் பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளார். இது தவிர அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, றுவான் விஜயவர்த்தன ஆகியோரும் இன்று தெரிவுக்கு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தத் தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *