போதைப்பொருள் காரர்கள் மகிழ்ச்சி அடைய காரணம் என்ன -ஜனாதிபதி விளக்கம்

Share Button
தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த மரணதண்டனையை இரத்துச் செய்யும் யோசனை சட்டபூர்வமற்றது என சட்டமா அதிபர் தனக்கு அறிவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக எழுந்து வரும் குரல்கள் குறித்து போதைப்பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளும் பெண்களை முறைகேடாகப் பயன்படுத்துபவர்களுமே மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அவர்களின் எண்ணம் நிறைவேற ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார். திவுலப்பிட்டிய பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கம்பஹா மாவட்ட நிறைவு விழாவில் ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *