கெரவலபிட்டியவில் குப்பை சேகரிக்கும் பணி இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

Share Button

கெரவலபிட்டிய குப்பை சேகரிக்கும் நிலையம், குப்பை சேகரிக்கும் பணியை கைவிட்டமை தொடர்பில் காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரொஹான் குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளார். இந்த குப்பை சேகரிப்பு நிலையம் தமது கொள்ளளவை தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவை அடுத்து, குப்பைகளை கெரவலபிட்டியவில் கொட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும், கெரவலபிட்டியவில் ஒரு வருடத்திற்கு மாத்திரமே குப்பை கொட்டத் தீர்மானிக்கப்பட்ட போதிலும், அங்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக குப்பை கொட்டப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையிலேயே குப்பைகளை அருவக்காலுக்கு கொண்டுசெல்லத் தீர்மானிக்கப்பட்டது. எனினும், கெரவலபிட்டியவில் குப்பை கொட்டுவது இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் சிலர் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் ரொஹான் குணவர்தன எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *