நடுத்தர வருமானம் பெறும் அரச சேவையாளர்களுக்கு ஹோமாகவில் வீடமைப்புத் திட்டம்

Share Button

நடுத்தர வருமானத்தைப் பெறும் அரச சேவையாளர்களுக்காக, தேசிய வீடமைப்பு அதிகாரசபை நடைமுறைப்படுத்தவுள்ள முதலாவது வீடமைப்பு வேலைத்திட்டம் ஹோமாகம ஜல்தர பிரதேசத்தில் அண்மையில் திறக்கப்படவுள்ளது. மேலும் பல திட்டங்கள் வாத்தூவ, மத்தேகொட மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் காலத்தில் தனியார் துறையைச் சேர்ந்த நடுத்தர வருமானம் பெறுவோரின் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சஜித் பிரேதமாஸ தெரிவித்துள்ளார்.

குருநாகல், கண்டி, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் எதிர்வரும் இரண்டு வருடங்களில் பல வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *