அரசியல் பழிவாங்கலும், இனவாதமும் நாட்டின் அபிவிருத்திக்கான பிரதான தடையாகும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Share Button

அரசியல் பழிவாங்கல்களும், இனவாதமும் நாட்டின் அபிவிருத்தியில் காணப்படும் பிரதான தடைகளாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், திகன வன்முறையினால் சொத்துக்களை இழந்தவர்களும் இழப்பீடுகளை வழங்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. அரசியல்வாதிகள் குறுகிய நோக்கங்களுக்காக இனவாதத்தைத் தூண்டுகிறார்கள். இதற்கு இடமளிக்கக் கூடாது. நாட்டின் அபிவிருத்திக்காக நாகரீக முன்னேற்றம் அவசியம் என்றும் பிரதமர் கூறினார்.

மனிதாபிமான ஆட்சியை ஏற்படுத்துவதற்காக 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி முறைமையை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்தினாலும், கட்சியை அழிக்க சிலர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்று நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *