இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ் காலமானார்

Share Button

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவ்ராஜ் காலமானார். டெல்லியில் உடல்நலக் குறைவால் அவர் தமது 67வது வயதில் நேற்று இரவு டெல்லியின் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த, பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இவர் பதவி வகித்தார். 25வயதில் பாராளுமன்ற  உறுப்பினராக தெரிவான  சுஷ்மா, பாரதிய ஜனதா கட்சியில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த பெண் என்ற பெருமையை சுஷ்மா பெறுகிறார்.

உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் இடம்பெற்ற மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. பாஜக பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்த போதிலும் தனக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்று சுஷ்மா மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சுஷ்மா சுவ்ராஜ் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு 10.15மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமான நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *