உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், தமக்கு முன்னரே தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

Share Button

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் தான் எந்தவொரு தகவலையும் அறிந்திருக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பேரவைக்கு தன்னை இறுதியாக 2018 ஒக்டோபர் மாதம் அழைத்ததாக அவர் கூறினார். 2019 பெப்ரவரி மாதத்தில் இருந்து பாதுகாப்புப் பேரவைக் கூட்டம் நடைபெறவில்லை என தான் அறிந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் பிரதமர் நேற்று சாட்சியமளித்தார். இதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, றுவன் விஜேவர்த்தன ஆகியோரும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2