நடைமுறையிலுள்ள சட்டத்தில் உள்ள குறைபாடுகள், சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தடையாக இருப்பதாக ஜனாதிபதி கூறுகிறார்

Share Button

நாட்டில் உள்ள சட்டக் கட்டமைப்பு, அரசியல் அமைப்பு, தேர்தல் சட்டம் என்பவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதில் இடையூறு ஏற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறந்த அரசியல் கலாசாரமொன்றிற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கையளிக்கும் தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் கலந்து: கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போதுள்ள வரப்பிரசாதங்களுக்கு மேலதிகமாக இன்னும் சில வரப்பிரசாதங்களுக்கு அனுமதி வழங்குவதற்குத் தான் உடன்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறந்த அரசியல் கலாச்சாரமொன்றிற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை கட்சி என்ற ரீதியில் உடன்படுவதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மகா சங்கரத்ன தேரர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *