முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக்க ஆகியோருக்கு உயர்மட்ட கௌரவ நாமங்கள் வழங்கப்பட்டுள்ளன

Share Button

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி எயார்சீஃப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோருக்கு கௌரவ பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தப் பதவிகளை வழங்கியிருக்கின்றார்.

நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஆற்றிய பணிகளை கௌரவிப்பது இதன் நோக்கமாகும். ரொஷான் குணதிலக்கவுக்கு மார்ஷல் ஒஃப் தி எயார்ஃபோஸ் என்ற கௌரவ நாமம் வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கை விமானப் படையின் முதலாவது எயார் மார்ஷல் என்ற கௌரவம் அவருக்கு இதன் மூலம் கிடைத்திருக்கின்றது. முன்னாள் கடற்படைத் தளபதி எட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எட்மிரல் ஒஃப் த ஃபிலீட் என்ற ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட உயர் கௌரவம் வழங்கப்பட்டிருக்கின்றது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *