ஜனாதிபதிக்கு கம்போடியாவில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது

Share Button

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கம்போடியாவில் நொம்பேன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்திருக்கின்றார். கம்போடியாவின் உப ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு அளித்தார்கள். கம்போடிய மன்னர் உட்பட அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இருதரப்பு பொருளாதார வர்த்தக சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. ஜனாதிபதி இன்று பிற்பகல் இலங்கை – கம்போடிய வர்த்தக சம்மேளனத்தின் அங்குரார்ப்பண மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *