இலங்கைக்கும் – கம்போடியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம்

Share Button

கம்போடியாவுக்கு இராஜாங்க விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை மற்றும் கம்போடிய வர்த்தகத்துறையினரை இன்று சந்தித்துள்ளார். இதில் கம்போடிய பிரதமரும் கலந்து கொண்டார். இலங்கைக்கும், கம்போடியாவுக்கும் இடையிலான வர்த்தக ரீதியிலான உறவுகளை வலுப்படுத்துவது இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

அபிவிருத்தி அடைந்துவரும் இரு நாடுகளுக்கு இடையில், பொருளாதார, வர்த்தகத்துறைகளில் இணைந்து செயற்படுவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. ஆடை, மாணிக்கக்கல்  தொழிற்துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அதிகரிப்பது சம்பந்தமாகவும் பேசப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11