டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்துகளை வழங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது

Share Button

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், அஸ்பிறின், இஸ்ரிரொயிட் போன்ற மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாமென்று சுகாதார அமைச்சு கடுமையான எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. தற்சமயம் நிலவும் பருவப்பெயர்ச்சி மழையினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் டெங்கு நோய் துரிதமாக அதிகரித்திருக்கிறது. அஸ்பிறின் போன்ற மருத்து வகைகளை பயன்படுத்திய டெங்கு நோயாளர்கள் உயிரிழந்த சம்பவங்கள் இடம்பெற்றதோடு, பல்வேறு நோயாளர்களிதும், உடல் நிலை மேலும் மோசமடைந்திருக்கிறது. அஸ்பிறின், புறூபன், மெத்தனமிக் அமிலம் உட்பட ஸ்ரிரொயிற் மருந்துகளை நோயர்களுக்கு வழங்க வேண்டாமென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க, பணிப்புரை வழங்கியிருக்கிறார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *