முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக ஆங்கில மொழியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பத் அபேகோன், சம்பத் விஜேரட்ன, சம்பா ஜானக்கி ராஜரட்ன ஆகிய மூன்று நீதியரசர்களைக் கொண்ட கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இந்தப் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருக்கின்றது. நீதிமன்றத்தில் ஆஜராக பிரதிவாதி தொடர்ந்தும் மறுத்து வருகின்றமையினால், அவரை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு சொலிசிற்றர் ஜெனரல் பிரியந்த நாவான நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.