கொழும்பில் ஏற்பட்ட குப்பைப் பிரச்சினைக்கு தற்போது உரிய வகையில் தீர்வு

Share Button

கொழும்பில் ஏற்பட்டிருந்த குப்பைப் பிரச்சினைக்கு தற்போது உரிய வகையிலான தீர்வு பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளம் அறுவக்காளு பகுதிக்கு கொண்டு செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து இதுவரை 14 கொள்கலன்களின் ஊடாக கொழும்பில் உள்ள குப்பைகள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் முகம்கொடுத்த பிரச்சினைக்கு உரிய தீர்வு எட்டப்பட்டுள்ளது. கரவலப்பிற்றிய குப்பை சேர்க்கும் இடத்தின் குப்பை கொட்டும் கொள்ளளவைவிட அதிகரித்ததால் கொழும்புப் பிரதேசத்தின் குப்பைகளை அங்கு கொட்டுவதற்கு முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் அறுவக்காளு குப்பை கொட்டும் இடம் நவீன மயப்படுத்தப்படும் என இன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *