கோப் குழு இன்று மீண்டும் கூடியது

Share Button

கோப் குழுக் கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி இதற்குத் தலைமை தாங்கினார். கோப் குழுக் கூட்டத்தை அறிக்கையிடுவதற்கான சந்தர்ப்பம் இன்று ஊடகங்களுக்கு முதல் தடவையாக வழங்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக ஆராயவென நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு அறிக்கையிடுவதற்கென சந்தர்ப்பம் வழங்கப்பட்ட இரண்டாவது பாராளுமன்ற தெரிவுக்குழு இதுவாகும். குழுவின் நடவடிக்கைகளை பதிவு செய்வதற்கான கமரா கட்டமைப்பும் இதில் பொருத்தப்பட்டிருந்தது. சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

ஊடக நிறுவனங்களுக்கு கோப் குழுவின் நடவடிக்கைகளை அறிக்கையிடுவதற்கென சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களுக்கு கூடுலாக பொறுப்புக் கூற வேண்டிய நிறுவனமாக பாராளுமன்றம் மாறியிருக்கிறதென நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *