தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களின் ஊடாக நாட்டிற்கு சிறந்த எதிர்காலம் தோன்றியிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

Share Button

தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களின் ஊடாக நாட்டிற்குள் சிறந்த எதிர்காலம் ஒன்று இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நாடு சிறந்த முறையில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வருடங்களில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் அபிவிருத்திப் பணிகளை பொறுப்பற்றவர்களிடம் கையளிக்க முடியாது. எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் சகலரும் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பு, குருநாகல் மற்றும் காலி மாவட்ட உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் பொதுமக்கள் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களுக்கு தெளிவூட்டுவதற்காக அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *