நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களில் குறைந்தும், அதிகரித்தும் காணப்படும்.

Share Button

தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் மூன்று தினங்களில் குறைந்தும், அதிகரித்த வகையிலும் தொடர்ந்து நீடிக்கக்கூடுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. தற்பொழுது நிலவி வரும் காற்றுடன் கூடிய காலநிலை ஏனைய நாட்களைப் போன்று குறைந்தும், அதிகரித்தும் காணப்படும் என்று திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில தினங்;களாக ஏற்பட்ட மழை மற்றும் கடும் காற்றின் காரணமாக சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு இழப்பீட்டு முற்பண கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்காக 19 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தேசிய இடர் நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்துள்ளார். தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியத்தில் தேவையான நிதி இதற்காக வழங்கப்பட்டிருக்கிறது. சீரற்ற காலநிலையினால் 17 மாவட்டங்களில் ஆயிரத்து 939 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *