வடக்கு மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருவதாக அந்த மாகாணத்தின் ஆளுநர் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளிடம் தெரிவிப்பு.

Share Button

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் சிலருக்கும், வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுனரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த பேச்சுவார்டத்தையின்போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் வாழ்;க்கை நிலையை மேம்படுத்துதல் மற்றும் மாகாண பாதுகாப்பு தொடர்பாக இவர்கள் பேச்சுhர்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது வடமாகாண ஆளுநர் அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் வடக்கு மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கியிருப்பதாக தெரிவித்தார். மாகாண அபிவிருத்தி பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை பெற்றுத் தருமான ஆளுநர் இந்த விசேட பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டுளார். இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய நாடுகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தி ரிகாடோ வெலரி மற்றும், ஆன்ஸ் வெபரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *