யுத்தம், குண்டு வெடிப்புக்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கக்கூடிய நியாயமான வேலைத் திட்டத்தின் தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share Button

யுத்தம் மற்றும் குண்டு வெடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கூடிய நேர்மையான வேலைத்திட்டம் ஒன்று விரைவில் வகுக்கப்பட வேண்டுமென்று தேசிய சமாதான சபையின் சிரேஷ்ட ஆலோசகர் சாந்த டி பத்திரன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற சட்டத்தின் மூலம் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டமை வரவேற்கத் தக்க விடயமாகும். இருப்பினும் இதன் பணிகள் முறையாகவும், விதி முறைகளுக்கு அமைவாகவும் இடம்பெறவில்லை. பல்வேறு காரணங்களினால் கொடுமைகளுக்கு உள்ளானவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும், யுத்தத்தினால் உயிரிழந்த அனைவருக்கும் நீதியான முறையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தாம் முன்னர் இருந்த நிலைமைக்கு அமைவாக வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய நடவடிக்கையும், தொழிலை இழந்ததனால் உளரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் நலமான வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கும் ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு மீண்டும் தலைநிமிர்ந்து செயற்படக்கூடிய வகையில் முழுமையாக சேதமடைந்தர்வர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலகம் செயற்பட வேண்டுமேன்றும் பத்தரன மேலும் தெரிவித்தார். எமது நிலையத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்;சியில் இன்று கலந்து கொண்ட இவர் நாட்டின் பிரஜையை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பென்றும் தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமது தகவல்களை கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட ஆவணங்களை முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். உயிரிழந்த ஒருவருக்கு விபரங்கள் அவரது பிறப்புச் சான்றிதழ், பணி தொடர்பிலான உறுதிச் சான்றிதல், விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான தகவல்களையும் சமர்ப்பிக்;க வேண்டும். 1988, 1989 ஆண்டு வன்முறைக்காலப் பகுதியில் காணாமல் போன 20 ஆயிரம் பேருக்காக புனர்வாழ்வு அதிகாரசபை இழப்பீடு வழங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11