20ஆவது ஆசிய சிரேஷ்ட மகளிர் கரப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பம்

Share Button

20ஆவது ஆசிய சிரேஷ்ட மகளிர் கரப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தென்கொரியாவில் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 13 நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன. இலங்கை அணி எதிர்வரும் 14ஆம் திகதி தென்கொரியா செல்லவுள்ளது. இலங்கை னு பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் சீனா, இந்தோனேஷியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இலங்கை சீனாவை இந்தப் போட்டியில் முதன் முறையாக எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இம்மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இரண்டாவது போட்டியாக இந்தோனேஷியாவில் இலங்கை அணி இம்மாதம் 19ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை பிலிப்பைன்ஸ் அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது,

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *