சீனாவில் சூறாவளி – பத்து லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

Share Button

சீனாவில் வீசிய சூறாவளியின் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். லக்கிமா என்ற இந்த சூறாவளியின் காரணமாக பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மண்சரிவின் காரணமாக 16 பேர் காணாமல் போயிருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவின் தாய்வான் மற்றும் சங்ஹாய் வர்த்தக நகரப் பகுதியை இலக்காகக் கொண்டு இன்று இந்த சூறாவளி வீசியுள்ளது. இந்த சூறாவளிக்கு ஆரம்பத்தில் சுப்பர் டைகோன் என்று பெயரிடப்பட்டது.

இது தரையை நெருங்கிய வேளையில் இதன் வலு குறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூறாவளியின் தாக்கம் தற்போது குறைவடைந்துள்ளது. 187 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. சூறாவளியை அடுத்து வென்ஸோவ் அணைக்கட்டு சேதமடைந்துள்ளது. இதனால், மண்சரிவு அபாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூறாவளி தற்போது ஸெஜியாங் என்ற மாகாணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஷங்ஹாய் பகுதியை இது வெகுவாக தாக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதனால், 20 மில்லியன் மக்கள் பாதிப்பை எதிர்நோக்குவார்கள் என்றும் ஊடகம் குறிப்பிட்டுள்ளது. வெள்ளத்தின் காரணமாக பொதுமக்களையும், வாகனங்களையும் மீட்பதில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மரங்கள் முறிந்து வீழ்ந்ததனால், பல பிரதேசங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *