பாதுகாப்புச் செயலாளர் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு விஜயம்

Share Button

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு இன்று விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் படையினரால் முன்னெடுக்கப்படுகின்றன.
புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம்; தொடர்பில் இதன்போது பாதுகாப்புச் செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பாதுகாப்பு செயலாளருடன், இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகளும் இணைந்து கொண்டனர்.
சீயோன் தேவாலயத்தின் நிர்வாகத்தினருடனும் பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *