தொடர்ந்தும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Share Button

மழை மற்றும் காற்றுக் காரணமாக நாட்டின் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 1939 வீடுகள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டிருப்பதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மததிய நிலையம் தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளர் சமிந்த பத்திரராஜ இதனைக் குறிப்பிட்டார். சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலியூடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 55 தொடக்கம் 60 கிலோ மீற்றர்களாக அதிகரித்து வீசும். அந்தக் கடற்பிரதேசங்கள் இடைக்கிடை கொந்தளிப்பதாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 65 தொடக்கம் 75 கிலோ மீற்றர் வரை உயர்வடையக்கூடும். மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
வடமேல், மேல், மத்திய மற்றும் தென்மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 65 கிலோ மீற்றராக அதிகரித்து வீசக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11