சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் மனோ கணேசனினால் சமர்ப்பிப்பு

Share Button

இலங்கையில் இருந்து சபரிமலைக்கான யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் வசதி கருதி இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்து சமய அலுவல்களை ஒழுங்குபடுத்தும் மற்றுமொரு அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இந்து சமய மறுமலர்ச்சிக்கான நடமாடும் மக்கள் சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்;பிட்டுள்ளார்.

முகத்துவாரம் நாவலர் மணி மண்டபத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இந்து சமய அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *