மாங்குளத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலை அமைக்க ஏற்பாடு

Share Button

பொதுமக்களுக்காக முதலாவது புனர்வாழ்வு வைத்தியசாலை மாங்குளத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பிக்கப்படுமென்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எமது நிலையத்தில் இடம்பெற்ற ‘சுபாரதி’ நிகழ்ச்சியில் இன்று கொண்ட அமைச்சர், நாட்டின் சுகாதாரத் துறைக்குத் தேவையான அனைத்து நவீன உபகரணங்களும் சமகால அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் வைத்தியசாலைகளுக்குப் பெற்றுக் கொடுத்ததாகவும் கூறினார். 225 சிறுநீரக இரத்த சுத்திகரிப்புக்கான இயந்திரங்களே முன்னர் இருந்தன. இது தற்போது 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்கு முன்னர் மேலும் இரத்த சுத்திகரிப்புக்கான ஆயிரம் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன் மூலம் அடையாளம் காணப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கான சிகிச்சை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். சிங்கப்பூரில் கூட இல்லாத நவீன உபகரணங்கள் இலங்கையில் தற்போது இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைத்திய பொறியியலாளர் சேவைப் பிரிவின் பணிப்பாளர் பொறிறியலாளர் ஜனப்பிரிய கருணாதிலக கருத்து வெளியிடுகையில், அனைத்து வைத்தியசாலைகளிலும் முறையான ஒழுங்கு விதிகளுக்கு அமைய எந்தவித உபகரணங்களும் தட்டுப்பாடுமின்றி விநியோகிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *