ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அறிவிப்பு

Share Button

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் புதிய தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ. இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும் பொழுது, நாட்டு மக்களின் அவசர தேவையை பூர்த்தி செய்வதற்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவானது என்று குறிப்பிட்டார்.

நாட்டின் சமகால பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் நாட்டு மக்களுக்கு நிம்மதியான சுபீட்சமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் ஜனாதிபதி வேட்பளாராக மக்கள் மிகவும் விரும்பிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்;.

தமிழ் தலைமைகளுடன் இணைந்து நாட்டில் சமாதானத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு தேவையான நடடிவக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைத்து இன, மத மக்களும் தங்களது வழிப்பாட்டுத் தளங்களில் அச்சமின்றி வழிபடுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளே, அக்கட்சியின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை இன்மைக்கு காரணம் என திரு மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே நாட்டில்; பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அச்சத்திற்கு மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் அவ்வாறான நிலை நாட்டில் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திரு.கோட்டபாய ராஜபக்ஷவும் உரையாற்றினார். நாட்டுக்காக தாம் எந்தவொரு சவாலையும் ஏற்றுக்கொள்ள தயார் என்று அவர் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11