பதவியிலிருந்த 10 வருட காலத்தில் செய்யத் தவறிய அபிவிருத்தி நடவடிக்கைகளை புது முகங்கள் கொண்டு எவ்வாறு ராஜபக்ஷமார் மேற்கொள்வர் என பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share Button

சிதைவடைந்த நாட்டை, பல சவால்களுக்கு மத்தியில், அரசாங்கம் மீளக் கட்டியெழுப்பி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அனைத்து பிரஜைகளுக்கும் ஒரு வளமான எதிர்காலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நாடு ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக முன்னேற்றம் காண்பதா அல்லது அழிவுப் பாதைக்கான காலத்தை நோக்கி நகர்வதா என்பதை தீர்மானிக்கும் தருணம் உருவாகி உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். அழிவடைந்த பயிர்ச் செய்கைகளுக்காக விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று குருணாகலில் இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பதவியிலிருந்த பத்து வருட காலத்தில் செய்யத் தவறிய அபிவிருத்தி நடவடிக்கைகளை புது முகங்கள் கொண்டு எவ்வாறு ராஜபக்ஷமார் மேற்கொள்வர் என்று திரு. விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *