படை வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் விரிவாக முன்னெடுக்கப்படும் – அமைச்சர் சஜித் பிரேமதாச

Share Button

படைவீரர்களுக்காக எதிர்வரும் காலத்தில் நலன்புரித் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படும் என்று வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், தெமட்டே-கமவில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமத்தை நேற்று பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச உரையாற்றினார்.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாதிரிக் கிராம வேலைத்திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்ட 246 ஆவது கிராமம் இதுவாகும்.

இதற்கென 2 கோடி 79 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இங்கு 28 வீடுகளைக் கொண்டதாக இந்த மாதிரிக் கிராமம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-01 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231
நோயிலிருந்து தேறியோர் - 18
இறப்புக்கள் - 2