உலக வாழ் முஸ்லிம் மக்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

Share Button

‘ஹஜ்’ என்ற சொல் ஒரு புனித பூமியை நோக்கிய யாத்திரையையே குறிக்கின்றது. உலகவாழ் இஸ்லாமியர்கள் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் பங்குபற்றும் ஒரு பாரிய மத வழிபாடாகவே அவர்களது ஹஜ் யாத்திரை அமைகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் இறுதிக் கடமையாகிய ஹஜ் யாத்திரையானது, உடல், உள மற்றும் பொருளாதார ரீதியில் மனதிருப்தியை அடையும் நிலையை எட்டிய ஆண் பெண் இருபாலாரும் மேற்கொள்ள வேண்டிய ஒரு மதக் கடப்பாடாகவே கருதப்படுகின்றது. நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஈகை மற்றும் ஹஜ் யாத்திரை ஆகிய ஐம்பெரும் தூண்களின் மீது எழுந்து நிற்கும் இஸ்லாமிய மார்க்கமானது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான உன்னத பிணைப்பையே எடுத்துக்காட்டுகின்றது.

சவால்களும் தடைகளும் நிறைந்த இன்றைய உலகில் பரஸ்பரம் மனிதர்களுக்கிடையில் இருக்க வேண்டிய பிணைப்பின் மகிமையை விளக்குவதற்கு ஹஜ் யாத்திரை சிறந்ததோர் முன்னுதாரணமாக அமைகின்றது என்பதே எனது எண்ணமாகும். மனிதர்கள் மத்தியில் நிலவும் எவ்வித ஏற்றத்தாழ்வுகளையும் பொருட்படுத்தாது, உலகின் நாலா திசைகளிலிருந்தும் மக்காவை நோக்கிவரும் இஸ்லாமிய பக்தர்கள் இந்த இறை வழிபாட்டின் மூலம் சமாதானத்துடனும் சகவாழ்வுடனும் ஏனைய இனத்தவர்களுடனும் மதத்தவர்களுடனும் வாழ்வதற்கான ஒழுக்கத்தினையே பெற்றுக்கொள்கின்றார்கள் என நான் நினைக்கின்றேன்.

புனித ஹஜ் யாத்திரை மூலம் சமத்துவம் பற்றிய செய்தியை சுதந்தவர்களாக ஹஜ் யாத்திரையில் பங்கேற்றோர் உட்பட நமது நாட்டிலும் உலகெங்கிலும் செறிந்துவாழும் சகல சகோதர இஸ்லாமியர்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சமத்துவம், சகோதரத்துவம் வழங்கி ஹஜ் பெருநாள் கொண்டாப்படுகிறது. அதேவேளை, சமாதானத்திற்கு சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மனித இனத்தின் தன்மைக்காக பொறாமை, ஆசை, சுயநலம் எனபவற்றை புறந்தள்ளி தமக்குரியவற்றை அந்நியருடன் பகிர்ந்து கொள்வது மிக முக்கியம் என்பதே இஸ்லாம் தர்மத்தின் ஆரம்ப பாடமாகும். சமூகத்தில் உள்ள ஏழை, பணக்கார வித்தியாசத்தையும் வேறு பேதங்களையும் களைந்து சமத்துவம், சகோதரத்துவத்தை உருவாக்குவதே ஹஜ் பெருநாளின் முக்கியத்துவமாகும். உலகம் பூராகவுமுள்ள இஸ்லாமிய மக்கள் எவ்வித பேதமுமின்றி, தோளோடு தோள் சேர சமாதானத்துக்காக இறைவனை வழிபடும் ஒரு முக்கிய நிகழ்வாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11