கம்பெரளிய என்ற தேசிய அபிவிருத்தி திட்டம் வடமாகாணத்திலும் முன்னெடுப்பு – சுவசெரிய என்ற அவசர அம்புலன்ஸ் சேவையின் இரண்டாம் கட்டம் பிரதமர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நாளை ஆரம்பம்

Share Button

கம்பரெலிய என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளையும், நாளை மறுதினமும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல அபிவிருத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. அமைச்சர் மங்கள சமரவீரவும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். என்டப் பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டத்தின் கீழ் கடன் உதவிகளும் இதன்போது வழங்கப்படவுள்ளன.

சுவசரிய என்ற அம்புலன்ஸ் வாகன சேவையின் இரண்டாம் கட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள வைபவத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து நேரடியாக இந்த வைபவத்தில் உரையாற்றவுள்ளார். சுவசரிய அம்புலன்ஸ் சேவையின் இரண்டாம் கட்டத்திற்காக இந்திய அரசாங்கம் 150 கோடீ ரூபாவை வழங்கியுள்ளது. இதன் கீழ் புதிதாக 200 அம்புலன்ஸ் வண்டிகள் இந்த சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *